ஹீரோயினாக நடிக்கும் பிக்பாஸ் ஜூலி!
ஹீரோயினாக நடிக்கும் பிக்பாஸ் ஜூலி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு
சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், சினிமா பிரபலம்
அல்லாத ஜூலி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள்
ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், ஜூலி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடை ஒன்றின்
விளம்பரப் படத்திலும், சில நாட்களுக்கு முன்பு அப்பள
நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றிலும் நடித்தார். அப்பள
விளம்பரத்தில் குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார் ஜூலி.
இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம்
தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும்
இந்தப் படத்தில் 'ஜூலியும் 4 பேரும்', 'தப்பாட்டம்' போன்ற
படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும்,
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து ஜூலி, "இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எனக்கு
பிடித்து விட்டது. மேலும் இந்தப் படம் என் வாழ்க்கையில்
மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" என நம்புவதாகவும்
தெரிவித்துள்ளார்.பிக்பாஸ் ஜூலி ஹீரோயினாக நடிக்கும் இந்தப்
படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு
விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment