ஹோட்டல்ல ரூம் போடறதுக்கு முன்னாடி இத செக் பண்ண மறக்காதீங்க!!!


ஹோட்டல்ல ரூம் போடறதுக்கு முன்னாடி இத  செக் பண்ண  மறக்காதீங்க!!!


உங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டிருந்தாலோ அலுவலகப் பணி காரணமாக சென்றாலோ ஹோட்டல்களில் தங்க நேரும்போது சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.


உங்களின் தேவைகளையும், உங்கள் பட்ஜெட்டையும் மனதில் கொண்டு அதற்குத்  தகுந்தபடி ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்வது அவசியம். அதுதான் மிக அடிப்படையான ஒரு விஷயம். அதைத்தாண்டி வேறு என்னென்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?


ஹோட்டல் ரூமை முன்பதிவு செய்வதற்கு முன்பாக பல விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன?


நீங்கள் தங்குவற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் ஹோட்டல் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், சுற்றுப்புறப் பகுதிகள் பற்றி நன்கு விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

அது உங்களுக்குப் பாதுகாப்பான இடமா இல்லையா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.




தங்கும் அறை காற்றோட்டமான விசாலமான அறையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தனி குளியலறை, ரூம் சர்வீஸ், வை-பை வசதி ஆகியவற்றைப் பரிசோதனை செய்யுங்கள்.

அந்த ஹோட்டலில் உணவு மற்றும் தண்ணீர் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பது மிக முக்கியம். வேலை நிமித்தமாக சென்ற இடத்தில் ஏதோவொரு உணவால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த வேலையையும் பாதிக்கும்.

தேவையில்லாத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பது போன்ற பாதுகாப்பு விஷயங்களை உறுதி செய்யுங்கள்.





ஒருவேளை ஆன்லைனில் ரூம் புக் செய்வதாக இருந்தால் அதற்கு முன்பாக அந்த ஹோட்டல் பற்றிய மற்ற வாடிக்கையாளர்களின் ரிவியூக்களை கொஞ்சம் சிரமப்படாமல் படித்துவிட்டு பணம் செலுத்துங்கள்.




இவையெல்லாம் ஹோட்டலில் ரூம் போடுவதற்கு முன்பாக கவனிக்க வேண்டும்.

Comments