பசித்தால் காசு இல்லாமல் உணவு  கொடுக்கும்  அட்சய பாத்திர திட்டம்  எந்த ஊர்னு  தெரியுமா?


காசு இருப்பவன், இல்லாதவன் என அனைவருக்குமே பசி என்பது ஒன்று தான். பசிக்கொடுமையை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. பசியின் வலியையும் யாராலும் விவரித்துக் கூற முடியாது.

அப்படி நம் கண் முன்னே எத்தனையோ பேர் உணவுக்காக கையேந்தி நிற்பதை நாம் பொது இடங்களில் பார்த்திருப்போம். அப்படி பசிக்கொடுமையால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தூத்துக்குடி மாநகராட்சி ஒரு அற்புத திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 


அந்த திட்டத்தின் பெயர் அட்சயப் பாத்திரத் திட்டம். தூத்துக்குடி மாநகராட்சியில் அட்சயப் பாத்திரம் என்ற பெயரில் ஒரு ஃபிரிட்ஜ் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஃபிரிட்ஜில் பணம் இருப்பவர்கள் உணவுப்பொருள்களை வாங்கியோ அல்லது தங்களிடம் உள்ள உணவுப்பொருள்களையோ வைத்துவிட்டுச் செல்லலாம்.


 பசி என்று வருபவர்கள் யார் வேண்டுமானாலும் ஃபிரிட்ஜில் உள்ள உணவில் தனக்குத் தேவையானதை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். 

இப்படியொரு அற்புதத் திட்டத்தை தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 17 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் ஏற்பாடு செய்து துவக்கி வைத்துள்ளார். 


இந்த திட்டத்துக்கு தூத்துக்குடி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 


இங்கு வைக்கப்பட்டுள்ள ஃபிரிட்ஜை தூத்துக்குடியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் இலவசமாக வழங்கியுள்ளது. அங்கு வரும் மக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு நல்ல தரமான உணவுகளை மட்மே ஃபிரிட்ஜில் வைத்துச் செல்கின்றனர். 


அதேசமயம் பசியால் வாடுபவர்கள் அந்த உணவுகளை எடுத்து சாப்பிடுகிறார்கள். 


பல பேருடைய பசியைத் தீர்க்கும் வகையிலான இந்த திட்டத்தைத் துவக்கி வைத்த ஆணையரை மக்களும் மனதார வாழ்த்திச் செல்கின்றனர். இதைப்பார்த்து மற்ற மாநகராட்சிகளிலும் பின்பற்ற ஆரம்பித்தால் பசியால் வாடுபவர்கள் வயிறாற உதவும்.

Comments