நடிகை பூமிகாவின் தற்போதயநிலை ?
நடிகை பூமிகாவின் தற்போதயநிலை ?
ஜில்லுனு ஒரு காதல் படத்தில், முன்பே வா பாடல் மூலம் ரசிகர்களை பரவசப்படுத்திய நடிகை பூமிகா, தற்போது அக்கா-அண்ணி கேரக்டரில் நடிக்க இறங்கிவந்துள்ளார்.
தமிழில் விஜய், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பூமிகா, தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிப் படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார். அவர் நடித்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்த களவாடிய பொழுதுகள் படம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.
காதாநாயகியாக வலம் வந்த பூமிகாவுக்கு திருமணத்திற்கு பின் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை! எனவே , அக்கா - அண்ணி கேரக்டரில் நடிக்க முன்வந்தார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அக்காவாக நடித்திருந்தார்.
தற்போது,தெலுங்கில் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் பூமிகா, இந்த வாரம் வெளியான ‘எம்சிஏ’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அடுத்து, நாக சைதன்யா நடிக்கும் ‘சவ்யசாட்சி’ என்ற படத்தில் பூமிகா சின்ன கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாயுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா, அக்கா- அண்ணி என கிடைக்கும் சிறு சிறு வேடங்களை ஏற்க தயாராக இருக்கிறாராம்.



Comments
Post a Comment