விஜய் நடிக்கவிருக்கிற அடுத்த படத்தில்?

       
                                   விஜய் நடிக்கவிருக்கிற                    

                               அடுத்த படத்தில்?


விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படமான மெர்சல், வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தந்தது. நடிகர் விஜய்க்கு அந்த படம்தான் இதுவரை அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையினையும் சேர்த்து கொடுத்தது. மிக பிரமாண்ட வெற்றியால் விஜய், மெர்சல் படக்குழுவுக்கு விருந்தும் வைத்து குஷியாக்கினார்.


இந்நிலையில்  விஜய் நடிக்கவிருக்கிற அடுத்த படத்தில் மீண்டும் ஏஆர் ரஹ்மானே இசையமைக்கலாம் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரில் அந்த படத்துக்கு யார் மியூஸிக் என்பது சர்ப்ரைஸாகவே இருந்தது. இப்போது கிடைத்திருக்கிற செய்திப்படி விஜய் 62க்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க அதிகவாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். பொறுத்திருந்து  பாப்போம் .


Comments