கல்வெட்டுக்களின் இருக்கும் சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா?
கல்வெட்டுக்களின் இருக்கும் சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா?
அந்தக் காலக் கல்வெட்டுகளில் சில குறிப்பிட்ட சொற்களுக்கு மறைமுக அர்த்தங்களை நம் முன்னோர்கள் புதைத்து வைத்துள்ளனர்.

வெட்டி :
முட்டாள்:
மன்னரால் ஆணையிடப்பட்ட சேவைப்பணியை வசதியானவர்கள் மற்றும் வயதானவர்களால் செய்ய இயலாதபோது அவர்களுக்குப் பதிலாக அந்த வேலையை உணவு, பணம் அல்லது பொருள் போன்றவற்றை பெற்றுக்கொண்டு செய்து தரும் நபர்கள் முட்டுக்குப் போன ஆள் என்ற பொருளில் முட்டாள் எனப்பட்டார்கள். திருவிளையாடல் புராணத்தில் வயதான பாட்டி செய்ய வேண்டிய ஆற்றின் கரையை அடைக்கும் பணியை அப்பாட்டி வழங்கும் பிட்டுக்காக சிவன் செய்வதாக குறிப்பிடப்படுவதை நினைவில் கொள்ளுங்கள்.
மடையர்:
ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையை திறந்து மூடும் பணி செய்தவர்கள் மடையர் என கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்கள். இப்பணியை எல்லோராலும் செய்துவிட முடியாது. இதில் பயிர்ச் பெற்றவர்களே இதை செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
உதிரப்பட்டி:
பொதுத்தொண்டு செய்தபோது இறந்த நபரின் குடும்பங்களுக்கு அவரின் உயிரிழப்புக்கு ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. இப்படி கொடுக்கப்பட்ட நிலம் உதிரப்பட்டி என அழைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கருங்குளத்தைச் சார்ந்த பெருந்தேவப் பள்ளன் என்பவன் இவ்வூரின் குளத்தில் நீர் அதிகமாகி உடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அதை அடைக்கும் பணியைச் செய்தபோது தனது உயிரை இழந்தான். தன் ஊரின் நலனுக்காக தன் இன்னுயிரை இழந்தான். பெருந்தேவப் பள்ளனுக்கு இவ்வூர் மக்கள் கி.பி.1302 இல் ஒரு நினைவுக் கல்வெட்டை நட்டு பெருமதிப்பளித்தனர். மேலும் இவனது மக்களுக்கு உதிரப்பட்டியாக நிலமும் கொடுத்தனர்.
மடையர்கள்:
ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில் நுட்பம்தான் "மடை". மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகி விடும். அதனை ஏரியின் அடியாழத்தில் வாதித்து அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்து விடுவார்கள். இதுதான் ஆரம்பகால 'மடை'. பிற்காலத்தில் பாறைகள், மர சட்டங்களில் 'மடைகள்' அமைக்கப்பட்டன.
வெள்ளம் வரும் காலங்களில் 'மடைகளை' திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். 'மடையைத்' திறப்பது எளிதானதில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி செய்யும் பெரிய சாகசப் பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன் ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச் சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி 'மடையின்' அடைப்பை திறந்து விடுவார். மடை திறப்பதும் புயல்வேகத்தில் வெளியேறும் நீர் மடை திறந்தவரையும் இழுத்துச் செல்லும். அந்த வேகத்தில் தப்பி பிழைப்பது கடினம். இவர்கள்தான் மடையர்கள் என அழைக்கப்பட்டனர்.
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே !!!!


Comments
Post a Comment